இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான இசை மற்றும் நடன செயல்முறை பயிற்சியை மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாக கிராமம் சார்ந்த மாணவர்களுக்கு திறம்பட கற்றுத் தருதல். நம் பாரம்பரிய தமிழ் கலாச்சார பண்பாட்டினை இதில் பாதுகாத்து பரப்பும் வகையில் இசை ஆராய்ச்சியும் புத்தொளிர் பெறும் வகையில் மேம்படுத்துதல்.
தென்னிந்தியாவின் நெற் களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் மிகச் சிறந்த இசை மையமாகவும் விளங்குகிறது. கர்நாடக இசையின் முக்கியமான இசை நாட்டியக் கலைஞர்கள், இயல் இசையாளர்கள், இசைக் கருவிகள் உற்பத்தி என்று அனைத்திற்கும் தஞ்சை ஒரு உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் வாழ்ந்து மறைந்த திருவையாறு இந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. மிகச் சிறிய கிராமமான திருவையாற்றில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் ஆராதனைக்காக அகில உலக அளவில் இசை வித்வான்கள், இசை ரசிகர்கள் ஒன்றிணைந்து பாடுவது சிறப்புடையது.
படிப்புகள் | கல்வித் தகுதி | ||
---|---|---|---|
முதன்மைப்பாடம்குரலிசை
வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில்,
நாதசுரம், நாட்டுப்புறக் கலை |
துணைப்பாடம்வீணை / வயலின்
குரலிசை / பரதநாட்டியம்
|
10ஆம் வகுப்பு தேர்ச்சி | 16 வயது முதல் 21 வயது வரை |
கல்வித் தகுதி | |
---|---|
10ம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை இசைப் பட்டம், இசை பட்டயம் (அல்லது) இசையில் இதற்கு நிகரான பட்டயம் | 16 வயது முதல் 25 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | ||
---|---|---|---|
நட்டுவாங்கம் |
|
10ம் வகுப்பு தேர்ச்சி,
பரதநாட்டியத்தில் பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு 16 வயது முதல் 21 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | ||
---|---|---|---|
முதன்மைப்பாடம்குரலிசை
வீணை / வயலின் /
பரதநாட்டியம் |
துணைப்பாடம்வீணை / வயலின்
குரலிசை / பரதநாட்டியம்
|
12ம் வகுப்பு தேர்ச்சி | 17 வயது முதல் 22 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | |
---|---|---|
முதன்மைப்பாடம்குரலிசை
வீணை
|
துணைப்பாடம்வீணை / வயலின்
குரலிசை
|
இளங்கலை இசை தேர்ச்சி |
இக்கல்லூரியில் பட்டய வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வும் பட்ட வகுப்புகளுக்கு பருவத் தேர்வுகளும் நடைபெறுகிறது.
இக்கல்லூரி நூலகத்தில் நல்ல நிலையில் போதுமான நூல்கள் உள்ளது.
டிப்ளோமா படிப்புகள் - ஆண்டுக்கு | இளங்கலை பட்டம் - ஆண்டுக்கு | முதுகலை பட்டம் - ஆண்டுக்கு | வங்கி விவரங்கள் |
---|---|---|---|
கல்வி கட்டணம் - ரூ. 320
சேர்க்கைக் கட்டணம் - ரூ. 5
சிறப்பு கட்டணம் - ரூ .425
|
சேர்க்கைக் கட்டணம் - ரூ. 10
சிறப்பு கட்டணம் - ரூ. 340
பல்கலைக்கழகக் கட்டணம் - ரூ. 1150
|
கல்வி கட்டணம் - ரூ. 2000
சேர்க்கைக் கட்டணம் - ரூ. 10
சிறப்பு கட்டணம் - ரூ. 300
பல்கலைக்கழகக் கட்டணம் - ரூ. 3100
மொத்தம் - ரூ. 5410
(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்டுள்ளது)
(விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 + கல்விக் கட்டணம் ரூ. 2000 = ரூ. 2150)
(5410-2150=3260) |
வங்கி எண் - 11295890141
ஐ.எஃப்.எஸ்.சி. - SBIN0006747
வங்கி பெயர் - SBI
கிளை - திருவையாறு
|
திங்கள் முதல் வெள்ளி வரை- காலை 10 மணி முதல் 4 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை)
விடுமுறை - சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.