மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஆவார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் சௌமியா அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கீத கலாநிதி முனைவர் எஸ்,இராமநாதன் மற்றும் சங்கீத கலாச்சார்யா திருமதி முக்தா அவர்களிடம் இசை பயின்ற முனைவர் சௌமியா அவர்கள் சிறந்த குரலிசைக் கலைஞராவார். இவர் பெற்றுள்ள பல்வேறு விருதுகளில் பெருமைக்குரிய விருதுகளான தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி விருது ஆகிய விருதுகளும் அடங்கும். மேலும் இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் நோக்கம்
இசை மற்றும் நுண்கலைகளின் மேம்பாட்டிற்காகவும், கற்றலின் முன்னேற்றத்திற்காகவும், ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், ஆடியோ, வீடியோ பதிவு மற்றும் தமிழ் மாநிலத்தில் உள்ள அனைத்து இசை, நுண்கலைகள் மற்றும் நிகழ்த்துக் கலைகளின் அனைத்துப் பிரிவுகளையும் பிரபலப்படுத்துவதும் நோக்கமாகும்.
இருப்பிடம்
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை-600028, அடையாறு ஆற்றங்கரையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் பிராடி கேசில் என்னும் கட்டடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் எம்.எஃப்.ஏ ஓவியம் மற்றும் காட்சிவழித் தொடர்புத் துறை தவிர குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம், நாகஸ்வரம் மற்றும் பரதநாட்டியம் பிரிவுகளில் முதுகலை மற்றும் எம்.பில் படிப்புகளை வழங்குகிறது.