அரசாங்கத்தின் சிறப்பு நடைமுறைகள்
கல்வி உதவித் தொகை
தமிழக அரசின் கல்வி உதவித் தொகை இக்கல்லூரியில் பயிலும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு தொடர்புடைய துறையின் மூலம் பெற்று வழங்கப்படுகிறது.
வரைப்படப் பொருட்கள்
மாணாக்கர்கள் பயன்பாட்டிற்கான வரைப்படப் பொருட்கள் ஆண்டுதோறும் ரூ 2000/- மதிப்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.
கல்விச்சுற்றுலா
வகுப்பறைகளில் செயல்முறை பயிற்சியும் கலை வரலாறு மற்றும் அழகியல் பாடமும் பயிலும் மாணவர்கள் இந்திய கலைச்சிறப்புகளை நேரில் காணும் அனுபவம் பெற்று சிறந்த கலைப்படைப்புகள் உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கலை மற்றும் கலைக்கல்வியகங்கள் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இத்திட்டத்திற்கு தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு, மூன்றாம் ஆண்டில் தென்னிந்தியா, நான்காம் ஆண்டில் வட இந்திய பகுதிகளுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் மாணவர்கள் அனைத்து மாநில கலை பண்பாடு குறித்த நேரடி அனுபவம் பெறுகின்றனர்.
அருங்காட்சியகம்
கலை அருங்காட்சியகத்தை பராமரிக்கும் ஒரே நிறுவனம் இது. கல்லூரியின் பழைய வளாகம் ஒரு அருங்காட்சியகமாக தனிப்பயனாக்கப்பட்டுள்ளது, இது எங்கள் மாணவர்களின் கலைத் துண்டுகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
அருங்காட்சியகம் கொண்ட ஒரே கல்லூரி இக்கல்லூரி. மாணவர்களின் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய கலை ஆர்வம் கலைவடிவம் பெறுகிறது. அக்கலை வடிவங்களை காட்சிப்படுத்துவதற்கும், பொதுமக்களின் பார்வைக்காகவும் இளம் மாணவ கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. பழைய கல்லூரி வளாகத்தில் இது இயங்கி வருகிறது.