கலைஞர்களுக்கான அடையாள அட்டைகள்
மாவட்டந்தோறும் கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள் 2002-2003 ஆம் ஆண்டு முதல் தலைவர், மாவட்டக் கலை மன்றம் / மாவட்ட ஆட்சியர் அவர்களின் கையொப்பத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன. அரசிடமிருந்து நிதியுதவி பெறுதல், அரசு நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் முன்னுரிமை பெறுதல் மற்றும் பயணச் சலுகை பெறுதல் ஆகியவற்றிற்கு இவ்வடையாள அட்டைகளை கலைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அடையாள அட்டைக்கான விண்ணப்பம்
பதிவிறக்க
மாவட்ட கலை விருதுகள்:
கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறன்படைத்த ஐந்து கலைஞர்களுக்கு அவர்களது அகவைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராகக் கொண்டு 9 உறுப்பினர்களைக் கொண்ட குழவினை அரசு அமைத்துள்ளது. விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பத்தினை பெற்றிட மாவட்டக் கலை மன்றத்தின் தலைவர் அவர்களால் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுக் குழுவால் சிறந்த கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
மாவட்டக்கலை விருதுகள் விண்ணப்பம்
பதிவிறக்க