கலையும், பண்பாடும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டவை. தமிழகத்தின் மரபுக் கலைகளையும், பண்பாட்டினையும் பாதுகாத்திடல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும், இசைக்கலை, நாடகக் கலை, நாட்டியக் கலை, ஓவியக்கலை, சிற்பக் கலை ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் கவின் கலைக் கல்வி பயிலகங்கள் வாயிலாக கொண்டு செல்லவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த 'கலை பண்பாட்டுத் துறை' என்ற ஒரு தனித்துறை டிசம்பர் திங்கள் 1991 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த அரசு சார்ந்த கலை... View More