தேசிய பாலஸ்ரீ விருது :-
புதுதில்லி தேசிய சிறுவர் மன்றம் 1995 ஆம் ஆண்டு முதல் தேசிய பாலஸ்ரீ விருது திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. தேசிய பாலஸ்ரீ விருது என்ற கௌரவம் தேசிய சிறுவர் மன்றத்தின் ஊக்கமிகுந்த ஒரு முயற்சி. நான்கு முதன்மையான பாடத் தலைப்புகளில் &டவ;டுபாடு கொண்ட சிறார்களின் படைப்புத் திறனை அடையாளம் காணவும், அவர்களின் படைப்பு திறமை மேம்படுத்தவும், தேர்வு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒரு சிக்கலான செயல்முறை அடிப்படையில் படைப்பாற்றல் உள்ள சிறார்களை நாட்டிற்கு அடையாளம் காட்டவும், ஒரு ஆக்கபூர்வமான நடைமுறை மட்டுமே நியாயமான தேர்வை உறுதிப்படுத்த இயலும் என்பதை மனதில் கொண்டு, 2015 ஆம் ஆண்டு இத்திட்டத்தில் சில மாற்றங்களை உள்ளடக்கி, சிறார்களின் படைப்புத் திறமை மேம்படுத்திடும் வகையில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய பாலஸ்ரீ விருது கௌரவம் என்பது பின்வருபவற்றை உள்ளடக்கியது.
- தேசிய பாலஸ்ரீ விருது பட்டயம்
- சான்றிதழ்
- ரூ.15,000/-த்திற்கான கிஸான் விகாஸ் பத்திரம்
- இலக்கிய தொகுப்புகள் (புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளை உள்ளடக்கியது)
தகுதி
- 10 முதல் 16 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
- வயது வகை : 10+ - 12 years 12+ - 14 years 14+- 16 years
- இப்போட்டியில் பங்கு பெறும் முயற்சிகளின் எண்ணிக்கை : இப்போட்டியில் பங்கு கொள்ளும் சிறார்கள் இப்போட்டியில் இரண்டு முறை மட்டுமே பங்கு கொள்ள முடியம், அதுவும் இதுவேறு வயது வகையில், மேலும், மாநிலப் போட்டியில் கலந்து கொண்டாலும், பாலஸ்ரீ விருது போட்டியில் கலந்து கொண்டதாகவே கருதப்படும்.
பால ஸ்ரீ தலைப்புகள்
வ.எண் |
பிரதான தலைப்புகள் |
உப தலைப்புகள் |
---|
I |
மேடைக்கலையில் படைப்பாற்றல் |
a. குரலிசை
b. நடனம்
c. தாள இசை / கருவியிசை
d. நாடகக் கலை மற்றும் பொம்மலாட்டம் |
II |
படைப்புக் கலை |
a.ஒவியம்
b. சிற்பம்
c. கைவினை
d. விஸ்வல் ஆர்ட்ஸ் ( கணினி வரைகலை மற்றும் டிஜிட்டல் ஆர்ட்) |
III |
எழுத்துக்கலையில் படைப்பாற்றல் |
a. கவிதை
b. கதை
c. கட்டுரை
d. உரையாடல்கள் மற்றும் நாடகம் |
IV |
அறிவியல் கலையில் படைப்பாற்றல் |
a. அறிவியல் மாடல் உருவாக்கம்
b. அறிவியல் திட்ட கண்டுபிடிப்பு
c. அறிவியல் புதிர்களுக்கு தீர்வு காணுதல்
d. அறிவியல் கண்டுபிடிப்பு |
பாலஸ்ரீ தேர்வின் நிலைகள்
மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று மூன்று நிலைகளில் பாலஸ்ரீ விருது தேர்வுகள், தேசிய சிறுவர் மன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், அடையாளம் காணப்பாட்ட மாநில மையங்கள் வாயிலாக மாநில அளவிலான தேர்வுகள் ஒருங்கிணைக்கப்படும். தேசிய அளவிலான தேர்வுகள் தேசிய சிறுவர் மன்றத்தால், புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தில் நடத்தப்படும். போட்டி நடைபெறும் நாள், விவரம் தொடர்புடைய மாநில மையங்களின் வாயிலாக சிறார்களுக்கு தெரிவிக்கப்படும்.
மாவட்ட அளவிலான தேர்வு
- விண்ணப்பங்களின் அடிப்படையில் மாவட்ட அளவிலான தெரிவுகள் நடைபெறும் (தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு, தகுதியும், திறமையும் வாய்ந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்). புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தில் இணைவு பெற்ற சிறுவர் மன்றம் 16 வகையான கலைகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவரை பரிந்துரைக்கலாம்.
- மாவட்ட போட்டியில் தெரிவு பெற்றவர் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்குபெறுவர்
- தமிழகத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் மாநில அரசின் நிதியில் நடத்தப்படுகிறது
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் இத்தெரிவில் பங்கு பெறலாம். ஒவ்வொரு முதன்மைப் பிரிவிலும் ஒருவர் வீதம் நான்கு முதன்மை பிரிவுகளில் நான்கு நபரை சிறப்பு பிரிவின் கீழ் பரிந்துரைக்கலாம்
- ஜவகர் சிறுவர் மன்றம் இல்லாத மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகம் வாயிலாக 16 வகையான பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் 16 நபர்களை அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகளில் இருந்து பரிந்துரைக்கலாம்.
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் இத்தெரிவில் பங்கு பெறலாம். ஒவ்வொரு முதன்மைப் பிரிவிலும் ஒருவர் வீதம் நான்கு முதன்மை பிரிவுகளில் நான்கு நபர் சிறப்பு பிரிவின் கீழ் மாநில போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மாநில அளவிலான தேர்வு
- புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தால் அடையாளம் காணப்பட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் புதுதில்லி தேசிய சிறுவர் மன்றம், மாநில சிறுவர் மன்றத்துடன் ஒருங்கிணைந்து மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
- மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்கள் / மாவட்ட நிர்வகம் ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், மாநில மையத்தினரால் முழுமையாக ஆராயப்பட்டு, தகுதி உள்ளவர்கள் மட்டும் 16 வகையான பாடப்பிரிவுகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர்
- மாநில அளவிலான போட்டிகள் ஒரு நாள் நடைபெறும் போட்டிகளாகவும், அதில் இரண்டு அமர்வுகள் உள்ளடக்கப்பட்டதாகவும் இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், இரண்டு வல்லுநர்கள் மாணவர்களை மதிப்பீடு செய்வர். மொழிபெயர்ப்பாளர், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்டவர்களும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பணியமர்த்தப்படுவர்.
தேசிய அளவிலான தேர்வு
- மாநில அளவில் பங்கு பெற்ற மாணவர்களின் மதிப்பீடு தாள்களின் அடிப்படையில், புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தால் தேசிய அளவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் விவரங்கள் தொடர்புடைய மாநில மையங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மாநில மையங்களின் வாயிலாக மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.
- தேர்வு பெற்ற சிறார்களிடையே தேசிய அளவிலான போட்டிகள் புதுதில்லியில் தேசிய சிறுவர் மன்றத்தால் இப்போட்டிகள் இரண்டு நாட்கள் நடத்தப்பெறும்.
- தேசிய அளவிலான போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டிகளாகவும், ஒவ்வொரு போட்டியிலும், இரண்டு வல்லுநர்கள் மாணவர்களை மதிப்பீடு செய்வர். படைப்பாற்றல் திறமை மற்றும் தகுதி வாய்ந்த மாணவர்கள் கண்டறியப்படுவர். மொழிபெயர்ப்பாளர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்டவர்களும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பணியமர்த்தப்படுவர்.
மதிப்பீடுகள் செய்வதற்கான அளவுருக்கள்
- தேசிய சிறுவர் மன்றத்தால் உருவாக்கப்பட்ட வினாத்தாள் கருவிகள் கொண்டு மாணவர்கள் கலந்து கொள்ளும் உபபிரிவில் பங்குகொள்ளுபவர்களில் இருந்து படைப்பாற்றல் மிக்கவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.
மேடைக்கலை படைப்பாற்றல் |
எழுத்துக்கலை படைப்பாற்றல் |
---|
வ. எண் |
விவரம் |
மதிப்பெண் (100) |
வ. எண் |
விவரம் |
மதிப்பெண் (100) |
---|
1 |
திறன் |
20 |
1 |
மொழித்திறனை சரளமாக கையாளுதல் |
20 |
2 |
உணர்வின் வெளிப்பாடு / தடுப்புகள் |
20 |
2 |
உணர்வின் வெளிப்பாடு / தடுப்புகள் |
20 |
3 |
அசல்தன்மை மற்றும் வழங்கப்படும் மைப்பொருளில் செயல்திறன் |
40 |
3 |
மைப்பொருளில் செயல்திறன் |
20 |
4 |
ஒட்டுமொத்த மதிப்பீடு |
20 |
4 |
அசல்தன்மை மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு |
40 |
படைப்பு கலை |
அறிவியல் கலை படைப்பாற்றல் |
---|
வ. எண் |
விவரம் |
மதிப்பெண் (100) |
வ. எண் |
விவரம் |
மதிப்பெண் (100) |
---|
1 |
செயல்முறை |
40 |
1 |
செயல்முறை |
40 |
2 |
தயாரிப்பு |
40 |
2 |
தயாரிப்பு |
40 |
3 |
அசல் தன்மை மற்றும் வெளியீட்டின் செயல்திறன் |
20 |
3 |
அசல் தன்மை மற்றும் வெளியீட்டின் செயல்திறன் |
20 |
- தேசிய அளவிலான தேர்வில் மேற்கூறியவற்றை தவிர, தேசிய சிறுவர் மன்றத்தால் தரப்படும் கருவிகளை பயன்படுத்தி படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை மதிப்பிடுவதற்கு வல்லுநர்கள் பங்கேற்பாளர்களை மதிப்பீடு செய்வார்கள்.
பாலஸ்ரீ விருதுகளின் எண்ணிக்கை
மூன்று வகை வயது பிரிவுகளில் மொத்தம் 80 விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுகள் விநியோகம்
(a) |
10-12 வயது பிரிவில் 20 விருதுகள்
i. 10-12 வயது பிரிவில் ஒவ்வொரு உபபிரிவிலும் ஒரு விருது
ii. ஒவ்வொரு முதன்மை பிரிவிலும் ஒரு மாற்றுதிறனாளிக்கு விருது |
மொத்தம் = 16
மொத்தம் = 4 |
(b) |
12-14 வயது பிரிவில் 20 விருதுகள்
i. 12-14 வயது பிரிவில் ஒவ்வொரு உபபிரிவிலும் ஒரு விருது
ii. ஒவ்வொரு முதன்மை பிரிவிலும் ஒரு மாற்றுதிறனாளிக்கு விருது |
மொத்தம் = 16
மொத்தம் = 4 |
(c) |
14-16 வயது பிரிவில் 40 விருதுகள்
i. 12-14 வயது பிரிவில் ஒவ்வொரு உபபிரிவிலும் இரண்டு விருது
(ii) ஒவ்வொரு முதன்மை பிரிவிலும் இரண்டு மாற்றுதிறனாளிக்கு விருது |
மொத்தம் = 32
மொத்தம் = 8 |
இறுதி முடிவு
- தேசிய சிறுவர் மன்றம், அங்கீகரிக்கப்பட்ட தேர்வு அளவு கோல்களைக் கொண்டு, மதிப்பீடு செய்து, பாலஸ்ரீ விருதினை அறிவிக்கும்
- மேற்காண் பாலஸ்ரீ விருது குறித்தான தேசிய சிறுவர் மன்றத்தின் முடிவுகள் இறுதியானது. விருது அறிவிக்கப்பட்ட பின்பு திருத்தம் / மறு மதிப்பீடு செய்வதற்கு எவ்வித வாய்ப்பும் கிடையாது
- தேசிய விருது பெற்ற சிறார்களை தமிழக அரசு உற்சாகப்படுத்தி, விருது பெறும் சிறார்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.15,000/- பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தை சார்ந்த 65 சிறார்கள் தேசிய பாலஸ்ரீ விருதினை பெற்றுள்ளனர்.
தேசிய பாலஸ்ரீ விருது பெற்றவர்களின் விவரம் ஆண்டு வாரியகாக பின்வரும் வகையில் தெரிவிக்கப்படுகிறது :--
2016 ஆம் ஆண்டில் தேசிய பாலஸ்ரீ விருதினை பெற்றவர்கள்
வ.எண் |
விருதாளர் பெயர் |
பிரிவு |
இடம் |
---|
1 |
செல்வி வி.யு.எம்.ஐஸ்வர்யா |
குரலிசை (மேடைக்கலை) |
சென்னை |
2 |
செல்வி ஆ.லலிதா அத்வைதா |
நாடகக் கலை (மேடைக்கலை) |
சென்னை |
3 |
செல்வி எஸ்.ஹரிப்பிரியா |
ஓவியம் ( படைப்புக்கலை) |
சென்னை |
4 |
செல்வன் பி.பார்த்திபன் (மாற்றுத்திறனாளி) |
சிற்பம் ( படைப்புக்கலை) |
சென்னை |
5 |
செல்வன் பி.ஜெயச்சந்தர் |
கணினி வரைகலை மற்றும் டிஜிட்டல் ஆர்ட் (படைப்புக்கலை) |
சென்னை |
6 |
செல்வன் ஜெ.பிரதீப்குமார் |
அறிவியல் மாதிரி உருவாக்குதல் (அறிவியல் படைப்பாற்றல்) |
சென்னை |
2015 ஆம் ஆண்டில் தேசிய பாலஸ்ரீ விருதினை பெற்றவர்கள்
வ.எண் |
விருதாளர் பெயர் |
பிரிவு |
இடம் |
---|
1 |
செல்வி ஐஸ்வர்யா (மாற்றுத்திறனாளி) |
நடனம் (மேடைக்கலை) |
சென்னை |
2 |
செல்வன் சங்கரபிரசாத் |
தாளவாத்ய கருவியிசை (மேடைக்கலை) |
சென்னை |
3 |
செல்வன் அபிஷேக் |
அறிவியல் கலை |
சென்னை |
4 |
செல்வன் சீனிவாசன் |
கணினி வரைகலை மற்றும் டிஜிட்டல் ஆர்ட் |
சென்னை |
5 |
செல்வி அக்ஷயா மோகன் |
கதை எழுதுதல் (எழுத்துக்கலை) |
சென்னை |
6 |
செல்வி நிகிதா |
ஓவியம் ( படைப்புக்கலை) |
சென்னை |
7 |
செல்வி தர்ஷினி |
நடனம் ( மேடைக்கலை) |
காஞ்சிபுரம் |
8 |
செல்வி ஸ்ருதி |
குரலிசை ( மேடைக்கலை) |
ஆற்காடு |
9 |
செல்வன் சஞ்சீவி |
அறிவியல் கலை |
ஊட்டி |
10 |
செல்வன் திருவேங்கடம் |
தாளவாத்ய கருவியிசை (மேடைக்கலை) |
கடலூர் |
11 |
செல்வன் கிரீஸ்வர் |
அறிவியல் கலை |
தஞ்சாவூர் |
12 |
செல்வி சம்யுக்தா |
கைவினை (படைப்புக்கலை) |
கரூர் |
13 |
செல்வி தேவிஸ்ரீ |
கைவினை (படைப்புக்கலை) |
சேலம் |
14 |
செல்வி மதுரிதா |
அறிவியல் கலை |
நாமக்கல் |
15 |
செல்வன் ஸ்ரீகாந்த் |
தாளவாத்ய கருவியிசை (மேடைக்கலை) |
ஈரோடு |
16 |
செல்வி ஜனனி |
கைவினை (படைப்புக்கலை) |
சேலம் |
17 |
செல்வி மோனிஷா |
எழுத்துக்கலை |
நாகர்கோவில் |
2013 ஆம் ஆண்டில் தேசிய பாலஸ்ரீ விருதினை பெற்றவர்கள்
வ.எண் |
விருதாளர் பெயர் |
பிரிவு |
இடம் |
---|
1 |
செல்வி பைரவி வெங்கடேசன் |
நடனம் (மேடைக்கலை) |
சென்னை |
2 |
செல்வி அஹாரிகா பாஸ்கர் |
ஓவியம் ( படைப்புக்கலை) |
சென்னை |
3 |
செல்வி அக்ஷயா |
கதை எழுதுதல் ( எழுத்துக்கலை) |
சென்னை |
4 |
செல்வன் சீனிவாசன் |
நடனம் ( மேடைக்கலை) |
ஆற்காடு |
5 |
செல்வி சௌமியாக ஹரிகரன் |
நடனம் ( மேடைக்கலை) |
கோயம்புத்தூர் |
6 |
செல்வி பிளஸ்சி ஸ்டெஜில் |
எழுத்துக்கலை |
திருநெல்வேலி |
7 |
செல்வன் பிரசாந்த் |
ஓவியம் (படைப்புக்கலை) |
திருச்சிராப்பள்ளி |