நலத்திட்ட உதவிகள்
திருமண நிதியுதவி
நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுபெற்ற நாட்டுப்புறக் கலைஞர், தனது உறுப்பினர் அடையாள அட்டையினை முறையாகப் புதுப்பித்திருப்பாராயின், நாட்டுப்புறக் கலைஞர் / மகன் / மகள் (இரண்டு முறை மட்டுமே) திருமண நிதியுதவியாக ரூ.5,000/- வழங்கப்படுகிறது. இதைப் பெற, பதிவு பெற்ற கலைஞரின் உறுப்பினர் அடையாள அட்டை நகல், திருமண அழைப்பிதழ், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட தம்பதிகளின் புகைப்படங்கள், இத்திட்டத்தின் கீழ் வேறெங்கும் நிதியுதவி பெறவில்லை என்று கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் .
மூக்குக்கண்ணாடி வாங்குவதற்கான நிதியுதவி
நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுபெற்ற நாட்டுப்புறக் கலைஞர், தனது உறுப்பினர் அடையாள அட்டையினை முறையாகப் புதுப்பித்திருப்பாராயின், பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,500/- (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை) வழங்கப்படுகிறது. இதைப் பெற, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் விண்ணப்பப் படிவத்துடன் அடையாள அட்டையின் நகல், கண்ணாடி வாங்கியதற்கான அசல் ரசீது, கண் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின் நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் .
இயற்கை மரணம் / ஈமச்சடங்கிற்கான நிதியுதவி
பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர் உறுப்பினர் ஒருவர், தனது உறுப்பினர் அடையாள அட்டையினை முறையாகப் புதுப்பித்து, இயற்கையாக மரணமடைந்தால், குடும்ப உதவித் தொகையாக ரூ.20,000/- மற்றும் இறுதிச் சடங்குச் செலவுகளைச் சந்திக்க ரூ.5,000/- மொத்தம் ரூ. 25,000/- இறந்த உறுப்பினரது நேமகதாரருக்கு வழங்கப்படும். இதைப் பெற, பதிவுசெய்யப்பட்ட உறுப்பினரின் நேமகதாரர் விண்ணப்பப் படிவத்துடன் அசல் அடையாள அட்டை, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் .
கல்வி நிதி உதவி
நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுபெற்ற நாட்டுப்புறக் கலைஞர், தனது உறுப்பினர் அடையாள அட்டையினை முறையாகப் புதுப்பித்திருப்பாராயின், அவரது மகன்/மகளுக்கு பத்தாம் வகுப்பு முதல் முதுகலை வரையிலான படிப்புகள் மற்றும் தொழில்முறைப் படிப்புகள் வரை அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு கல்விக்கான நிதியுதவி விடுதியில் பயில்வாராயின், விடுதி கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. இதைப் பெற, பதிவுபெற்ற கலைஞரின் உறுப்பினர் அடையாள அட்டை நகல், பள்ளி / கல்லூரியால் வழங்கப்பட்ட போனஃபைட் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் .
மகப்பேறு நிதியுதவி
நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுபெற்ற பெண் நாட்டுப்புறக் கலைஞர், தனது உறுப்பினர் அடையாள அட்டையினை முறையாகப் புதுப்பித்திருப்பாராயின், இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 2 குழந்தை பிறப்பிற்கான மருத்துவமனைச் செலவிற்காக ரூ.6,000/- வழங்கப்படும். இதைப் பெற, பதிவுபெற்ற பெண் நாட்டுப்புறக் கலைஞரின் உறுப்பினர் அடையாள அட்டை நகல், குழந்தைப் பிறப்பிற்கான மருத்துவ அறிக்கை (மருத்துவமனை சேர்க்கை மற்றும் விடுவிப்பு), குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் .
கருக்கலைப்பு / கருச்சிதைவு நிதியுதவி
நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுபெற்ற பெண் நாட்டுப்புறக் கலைஞர், தனது உறுப்பினர் அடையாள அட்டையினை முறையாகப் புதுப்பித்திருப்பாராயின், அவருக்கு கருக்கலைப்பு / கருச்சிதைவு ஏற்பட்டால், இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 2 முறை மருத்துவமனைச் செலவுகளுக்காக ரூ.3,000/- வழங்கப்படும். இதைப் பெற, பதிவுபெற்ற பெண் நாட்டுப்புறக் கலைஞரின் உறுப்பினர் அடையாள அட்டை நகல், மருத்துவரின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் .
விபத்து மரண உதவித் தொகை
பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர் ஒருவர், தனது உறுப்பினர் அடையாள அட்டையினை முறையாகப் புதுப்பித்து, விபத்தில் மரணமடைந்தால், இறந்த உறுப்பினரது நேமகதாரருக்கு விபத்து மரண நிதி உதவியாக ரூ.1,00,000/- வழங்கப்படும். இதைப் பெற, பதிவுசெய்யப்பட்ட உறுப்பினரின் நேமகதாரர் விண்ணப்பப் படிவத்துடன் அசல் அடையாள அட்டை, மருத்துவரின் மருத்துவ அறிக்கை, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் .