இந்திய கலைவரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது, நோக்கும் இடமெல்லாம் உயரிய கலையினை பறைசாற்றும் கலைபடைப்புகள் காணக்கிடைக்கின்றன. வகுப்பறைகளில் செய்முறை பயிற்சியும் கலைவரலாறு, பாடம் பயிலும் மாணவர்கள் இந்திய கலையின் சிறப்புகளை நேரில் கண்டு அனுபவம் பெற்று மேலும் சிறந்த கலைபடைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற பரந்த தொலைநோக்கோடு கல்விசுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
- தென்னிந்தியா (II ஆம் ஆண்டு மாணவர்கள்)
- மத்தியஇந்தியா(III ஆம் ஆண்டு மாணவர்கள்)
- வடஇந்தியா (IV ஆம் ஆண்டு மாணவர்கள்)
ஆகிய பகுதிகளுக்கு 21 நாட்கள் வீதம் மூன்று ஆண்டுகள் இரண்டு ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. இத்தொகையில் மாணவர்களுக்கான தொடர்வண்டி சலுகைக் கட்டணம், சுற்றுலா பயண இடங்களுக்கு செல்லும் பயணக் கட்டணம் மற்றும் 21 நாட்களுக்கான தினப்படி ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கலை, கலாச்சாரம் பண்பாடு ஆகியவை குறித்த விரிவான தகவல்களை நேரில் அறிந்து அனுபவம் பெறும் அரிய வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
|
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் திறனும் கல்லூரியின் செயல்பாடுகளும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக கண்காட்சி நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அக்கண்காட்சியில் கல்லூரியில் பயிலும் அனைத்துத் துறை மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தி அவர்களது தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மட்டுமல்லாது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கருத்தரங்குகள், பயிற்சிமுகாம்கள் நடத்தப்படுகின்றன.
|